தொடருந்தில் மோதி வயோதிபர் பரிதாப மரணம்
காலியில் தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேறறையதினம்(10.2.2026) இடம்பெற்றுள்ளது.
காலி, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்தபோது ரயிலில் மோதி மேற்படி வயோதிபர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.