தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5020 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கையில் இன்றைய (10.02.2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,549,950 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 54,680 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 437,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 50,130 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 401,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 47,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) 382,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.