பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள் | Tourists Flock To Sri Lanka Amid Disasterஇவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 501,097 ஆகும்.

மேலும், ஜெர்மனியிலிருந்து 139,355 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 171,099 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 200,939 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 101,012 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 127,553 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 104,802 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 115,616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.