கட்டண சீட்டை வழங்க சென்ற மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மொனராகலை - வெல்லவாய பகுதியில் மின்சார கட்டண சீட்டை வழங்க சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் நடந்த நேரத்தில் தாக்குதலுக்குள்ளான நபர் தனது தொலைபேசியில் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
அத்துடன், தாக்குதலுக்குள்ளான நபர் இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளித்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் வியாழக்கிழமை (18) வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று (19) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.