கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் புதிய திருப்பம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் புதிய திருப்பம்

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்சி 90 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் புதிய திருப்பம் | New Twist In Ganemulla Sanjeeva Murder Case

குறித்த காவல்துறை சார்ஜன்ட், சந்தேக நபருடன் பிஸ்கட்டை இரண்டாக உடைத்து கை சைகைகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலே அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.