யாழில் இளம் தாய் தீ விபத்தினால் உயிரிழப்பு

யாழில் இளம் தாய் தீ விபத்தினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இளம் தாய் தீ விபத்தினால் உயிரிழப்பு | Teacher Dies In Jaffna In Fire Accident

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் தமிழ் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.