பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு: 20 வயது இளைஞன் பலி

பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு: 20 வயது இளைஞன் பலி

பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பண்டாரவளை பகுதியில் வசிக்கும் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று (09) மாலை கட்டானை காவல் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர்  பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு: 20 வயது இளைஞன் பலி | Explosion At Fireworks Factory In Katana One Death

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த வெடிப்புச் சம்பவம் நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையொன்றில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வெடிப்பில் படுகாயமடைந்த இளைஞன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.