சீரற்ற காலநிலையிலும் இலங்கைக்கு வந்த பெருமளவு சுற்றுலா பயணிகள்!

சீரற்ற காலநிலையிலும் இலங்கைக்கு வந்த பெருமளவு சுற்றுலா பயணிகள்!

  நாட்டில் சீரற்ற காலநிலை நிலவியபோதும் இம் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43,000 ஐத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (07) நிலவரப்படி, 43,329 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்தவர்களில் 8,989 பேர் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.

சீரற்ற காலநிலையிலும் இலங்கைக்கு வந்த பெருமளவு சுற்றுலா பயணிகள்! | Tourists Visited Disaster Sri Lanka

மேலும் ரஷ்யா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், சீனா,அவுஸ்திரேலியாவிலிருந்தும் சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.