தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த 06 ஆம் திகதி விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலே இன்றும் (08) தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய (08.12.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,298,993 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 45,830 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 366,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 42,020 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 336,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 40,110 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 320,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.