வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை

வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்  இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார்.

வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை | Bank Officer S Wife Commits Murderகுடும்ப தகராறு அதிகரித்தபோது, ​​மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி,பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.