‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான ‘டித்வா’புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்திற்குப் பின்னர், நாட்டை மீளக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டரீதியான நிதியமாக நிறுவப்படவுள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரசாங்க மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். 

தொழில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதன் தலைவராகச் செயல்படுவதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயற்படவுள்ளார். 

நிதியத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு, 

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும், மேல் மாகாண ஆளுநருமான ஹனீஃப் யூசுப் 

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும 

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ 

வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன 

ஹேலீஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே 

ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன் 

எயிட்கன் ஸ்பென்ஸ் துணைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி பராக்கிரம திசாநாயக்க 

பிராண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரோஃப் ஒமர் 

LOLC இன் நிறைவேற்றுத் தலைவர் இஷார நாணயக்கார ஆகியோரும் இதில் செயற்படுவார்கள். 

இந்த நிதியைத் திறம்பட முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் முகாமைத்துவக் குழுவிடம் உள்ளதுடன், தேவைகளை மதிப்பீடு செய்தல், முன்னுரிமைகளை நிர்ணயித்தல், நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பணத்தை வெளியிடுதல் ஆகியவை அதன் பொறுப்புகளில் அடங்கும்.