உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,150 அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது  (25) இன்று  ரூ.6,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | Srilanka Gold Priceஅதன்படி, இன்று காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று, அதே விலை ரூ.303,600 ஆக இருந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று ரூ.330,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று ரூ.336,000 ஆக அதிகரித்துள்ளது.