யாழ் உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ் உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  

யாழ் உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain Weather Forecast Live Today

வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.