தொடரும் ட்ரம்பின் அதிரடி -சீனாவுக்கு பேரிடியாய் அமைந்த செய்தி

தொடரும் ட்ரம்பின் அதிரடி -சீனாவுக்கு பேரிடியாய் அமைந்த செய்தி

கொரோனா பரவலை அடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என வெளிப்படையாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சுமத்தி வருகிறார்.

இந்த நிலையில் சீனாவுக்கு எதிரான பல்வேறு தடைகளை விதிப்பதிலும் அவர் முன்னின்று செயற்படுகிறார்.

தற்போது அதில் ஒரு கட்டமாக அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.

இது குறித்து பேசியுள்ளஜனாதிபதி ட்ரம்ப் " சீனாவுக்கு சொந்தமான செயலிகளின் பயன்பாடு அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. டிக்-டாக்கின் தரவு சேகரிப்பு அமெரிக்க அரசாங்க ஊழியர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தி உளவு பார்க்கவும் சீனாவை அனுமதிக்கிறது" என தெரிவித்துள்ளார்.