ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நாடு சுகாதார ரீதியில் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் சுகாதார முறைகளுக்கு அமைய நாடு முழுவதும் நடைபெற்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பிரதமர், ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஆகியோர் வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்பையும் அவர் சுட்டிக்காட்டியதுடன் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல சுகாதாரத் துறையினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தமது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நாடு சுகாதார ரீதியில் பாதுகாப்பாக உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

லைப்ஸ்டைல் செய்திகள்