கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நபர்

கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நபர்

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 45 வயதுடைய ஒருவ ர் கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை தனது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி,அவர் நான்கு நாட்களாக ஹோட்டலில் தங்கியிருந்தார்.

கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நபர் | Man Found Hanging In Colombo Star Hotel

அவரது அறையின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை ஹோட்டல் ஊழியர்கள் கவனித்தபோது, அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கி இருப்பதைக் கண்டனர். பிரேதபரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் மரணம் நிகழ்ந்தது என உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலில் கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்த பிறகு இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் மேலதிஅக் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.