காதலை ஏற்கவில்லை ; மாணவியின் படத்தை நிர்வாணமாக்கி இணையத்தில் பரப்பிய மாணவன்

காதலை ஏற்கவில்லை ; மாணவியின் படத்தை நிர்வாணமாக்கி இணையத்தில் பரப்பிய மாணவன்

பாடசாலை மாணவியின் புகைப்படத்தை நிர்வாணப் படத்துடன் இணைத்து இணையத்தில் பரப்பியதாக 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் காலி மேலதிக நீதவான் மகேஷிகா விஜேதுங்க முன் ஆஜர்படுத்தப்பட்டு ரூ. 200,000 சரீர பிணையில் விடுவிக்கப்பட்டான்.

விடுவிக்கப்பட்ட மாணவன் அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான். பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்று நீதவான் கடுமையாக எச்சரித்தார்.

காதலை ஏற்கவில்லை ; மாணவின் படத்தை நிர்வாணமாக்கி இணையத்தில் பரப்பிய மாணவன் | Posted Nude Picture Of School Student Internetமாணவியின் தோழி தனது மூத்த சகோதரனுக்கு தனது படம் இணையத்தில் பகிரப்பட்டதாக தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சகோதரர் உடனடியாக காலி சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்தார். விசாரணையின் போது, ​​சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது  மாணவன், மாணவியை ஒரு தலைபட்சமாக கதலித்தமை  தெரியவந்துள்ளது.

சிறுவன்,  சிறுமியை காதல் ரீதியாக பின்தொடர்ந்ததாகவும்,  மாணவி காதலை ஏற்காது   நிராகரித்த்துள்ளார்.

 அதனால் கோபமடைந்து  மாணவன் ,  மாணவியின்  முகத்தை ஒரு நிர்வாணப் புகைப்படத்துடன் டிஜிட்டல் முறையில் இணைத்து ஆன்லைனில் பதிவேற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 மேலும்  காலியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகார் IP கயானி மற்றும் சார்ஜென்ட் பிரியந்த ஆகியோர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும்  கூறப்படுகின்றது.