கொடுக்கல் வாங்கலால் கொலை; பறிபோன உயிர்

கொடுக்கல் வாங்கலால் கொலை; பறிபோன உயிர்

நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (25) பதிவாகியுள்ளது.

கொடுக்கல் வாங்கலால் கொலை; பறிபோன உயிர் | Murder Due To Bargaining Negombo

உயிரிழந்தவர் டெல்மார்வத்த, ஹல்கிரான் ஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பணப் பரிவர்த்தனை தொடர்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரைக் கைது செய்ய நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.