ஏ.ரி.எம் அட்டையில் பொருட்கள் கொள்வனவு ; பொலிஸ் உத்தியோகத்தரின் கேவலமான செயல்

ஏ.ரி.எம் அட்டையில் பொருட்கள் கொள்வனவு ; பொலிஸ் உத்தியோகத்தரின் கேவலமான செயல்

கந்தர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கந்தர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏ.ரி.எம் அட்டையில் பொருட்கள் கொள்வனவு ; பொலிஸ் உத்தியோகத்தரின் கேவலமான செயல் | Police Purchase Goods Using The Detainee Atm Card

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், 2024 ஆம் ஆண்டு மாத்தறை - கந்தர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.