வடக்கு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: கொட்டித் தீர்க்கப் போகும் மழை

வடக்கு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: கொட்டித் தீர்க்கப் போகும் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (9) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: கொட்டித் தீர்க்கப் போகும் மழை | Heavy Rainfall Forecast In Tamil

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும்.

தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.