
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற மாணவன் உயிரிழப்பு
மூன்று மாணவர்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றபோது அதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெல்தெனிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பாடசாலை மாணவர்கள் மூவர் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற நிலையில் இருவர் மீட்கப்பட்டதாகவும், ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெல்தெனிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட இரண்டு மாணவர்களும் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவத்தில் உயிரிழந்தவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று தெல்தெனிய பொலிஸார் கூறியுள்ளனர்.