அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் விலை!

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் விலை!

சில உணவு வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார்.

இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பிரைட் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த உணவு வகைகளின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் விலை! | Prices Of Foods Reducedஅத்துடன், அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்குமாறு உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொள்வதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் கோரிக்கை விடுத்துள்ளார்.