பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மில்லியன் ரூபா இழப்பீடு

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மில்லியன் ரூபா இழப்பீடு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதி நிதியம் உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் தலா 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்றிரிவு 500 அடி பள்ளத்தில் கவிழந்து பாரிய விபத்தை ஏற்பட்டிருந்தது.

இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மில்லியன் ரூபா இழப்பீடு | Compensate Those Who Died In Bus Accident

காவல்துறையினர், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

இந்த நிலையில், எல்ல விபத்தில் இறந்த அனைவரின் இறுதிச் சடங்குகளும் தங்காலை மாநகர சபை மற்றும் தங்காலை தொழிற்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.