
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.