
15பேரை பலியெடுத்த கோர விபத்து ; உயரும் பலி எண்ணிக்கை, நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம்
எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 500 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.