ரயில் தண்டவாளத்தில் கைபேசியால் பறிபோன உயிர்; தமிழர் பகுதியில் துயரம்

ரயில் தண்டவாளத்தில் கைபேசியால் பறிபோன உயிர்; தமிழர் பகுதியில் துயரம்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஊறணி யைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் கரிகரராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

ரயில் தண்டவாளத்தில் கைபேசியால் பறிபோன உயிர்; தமிழர் பகுதியில் துயரம் | A Life Lost Due To A Mobile Phone Railway Tracksகுறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அடுத்து சம்பவ தின இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியிடம் தொலைபேசியில் பேசி சண்டை பிடித்துக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த ரயிலில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.