மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; 9 அழகிகள் கைது

மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; 9 அழகிகள் கைது

தெஹிவளை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (10) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; 9 அழகிகள் கைது | 9 Beauties Arrested Prostitution At Massage Parlor

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 51 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.