கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் பெண் பலி்.. கடும் குழப்பநிலையில் பொலிஸார்

கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் பெண் பலி்.. கடும் குழப்பநிலையில் பொலிஸார்

கிளிநொச்சி - அக்கராயன் முருகண்டி வீதியில் சற்று முன்னர் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், குறித்த விபத்து இடம்பெற்ற வீதி எந்த பொலிஸ் பிரிவை சேர்ந்தது என்பது தொடர்பில் பொலிஸாரிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

அக்கராயன் முருகண்டி வீதிப்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் எந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் பெண் பலி்.. கடும் குழப்பநிலையில் பொலிஸார் | Kilinochchi Accident Woman Died Police Border

அதாவது விபத்து நடந்த இடமானது, அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்தா அல்லது கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்தா அல்லது மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்தா என பொலிஸாரிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் இத்தெளிவின்மை குறித்து கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டுள்ளன.