நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர

நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர

சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும் என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

சபையில் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,  ஜனாதிபதி அநுர பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்துள்ளார்.

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன.

நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர | Several Schools Will Close Soon In Sri Lanka

அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர்.

100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.

நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர | Several Schools Will Close Soon In Sri Lanka

குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.

சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும்.

இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.