
4 பிள்ளைகளின் தந்தைக்கு அதிகாலையில் நேர்ந்த துயர சம்பவம்
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர எனும் பகுதியில் வைத்து யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மல்லிகைத்தீவச் சேர்ந்த 47 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன், நாராயணபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சேருநுவர பிரிவில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்கு திரும்புகையியே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் சேருவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.