வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு

வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றவர்கள் தொடர்பான தகவல்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லையெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு | 7 000 Sri Lankans Who Went Abroad Lost Their Lives

இதனடிப்படையில் கடந்த 15 வருடங்களில் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7735 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றில் 4769 உடல்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதும், 2966 உடல்கள் இன்னும் நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொண்டு வரப்பட்ட ஒரு உடல் இன்னும் உறவினர்களால் அடையாளம் காணப்படவில்லையெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.