மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்த கட்டுமானத் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்த கட்டுமானத் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்து கட்டுமானத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹடபிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கம்பளை யை சேர்ந்த 58 வயதுடைய கட்டுமானத் தொழிலாளி

இவர் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி கீழே வீழ்ந்துள்ள நிலையில் ஏனைய தொழிலாளிகளின் உதவியுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.