இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

72,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக விநியோகிக்கப்படவுள்ளன.

குறித்த திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 8ஆம் திகதி ஏல விற்பனையினூடாக விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட, 17,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் விநியோகிக்கப்படவுள்ளன.

central bank of sri lanka

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.