
கொழும்பை வந்தடைந்த உலகின் மிக பெரிய கொள்கலன் கப்பல்
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக கருதப்படும் எம்.எஸ்.சி மரியெல்லா கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல், நேற்றையதினம்(28.04.2025) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு(ECT) வந்து சேர்ந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவின் சைபீரியாவைச் சேர்ந்த குறித்த கப்பல், 399.90 மீட்டர் நீளமும் 61.30 மீட்டர் அகலமும் கொண்டது.
240,737 டன் எடையுள்ள கொள்கலன் எடையைக் கையாளக்கூடிய இந்தப் பெரிய கப்பல், 2023ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
இலங்கை துறைமுக ஆணையகத்தின் கூற்றுப்படி, இந்தக் கப்பல் இப்போது இலங்கை துறைமுகத்துக்கு முதல் தடவையாக வந்துள்ள மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகும்.
இந்நிலையில், எம்.எஸ்.சி மரியெல்லா கப்பல் மூலம் கொள்கலன் முனையத்தில் 1600 கொள்கலன்களை ஏற்றி இறக்கும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கனக ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கப்பலின் வருகை, இலங்கையின் கடல்சார் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.