
ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்
ஏப்ரல் மாதத்தில் வந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஐவருக்கு ஒருவர் இந்தியர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த 1,44,320 வெளிநாட்டினரில், 29,763 பேர் இந்தியர்கள் எனவும், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20.6 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான அண்மைய புள்ளி விபரங்களுக்கமைய, இந்த ஆண்டில் இதுவரையில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8,66,596 ஆக அதிகரித்துள்ளது.