களனிவெளி மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்பு
மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக களனிவெளி மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொஸ்கம- வக, மீகொட-ஹோமாகம மற்றும் நுகேகொட- நாராஹென்பிட ஆகிய பகுதிகளுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தில் இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக குறித்த கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.