காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்

 அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன் | Student Committed Suicide Due To Unrequited Love

சமீபத்தில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவனின், காதல் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.

கடிதம் ஒன்றை எழுதி வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.