காதல் உறவால் நேர்ந்த கொடூரம் ; கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை

காதல் உறவால் நேர்ந்த கொடூரம் ; கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை

மதுகம, டோலஹேன பகுதியில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் அங்கலவத்தையைச் சேர்ந்த மேர்வின் சமரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர் என்று மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் உறவால் நேர்ந்த கொடூரம் ; கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை | Young Woman Murdered By Slitting Her Throat

உடலில் பல வெட்டுக் காயங்களும் காணப்பட்டதுடன், காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகத் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்  அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

நீதவானின் பரிசோதனையின் பின்னர் சடலம் நாகொட மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.