இலங்கையில் குடும்பமொன்றுக்கு தேவையான மாத வருமானத்தின் உண்மை நிலை

இலங்கையில் குடும்பமொன்றுக்கு தேவையான மாத வருமானத்தின் உண்மை நிலை

இலங்கையின் சராசரி குடும்பம் ஒன்றின் உணவு மற்றும் பிற தேவைகளை நிறைவு செய்ய மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு குடும்பத்தின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு குடும்பத்திற்கு 47,107.55 ரூபாய் தேவைப்படும்.

அத்துடன், உணவு அல்லாத பிற செலவுகளுக்காக ஒரு குடும்பம் 57,507.67 ரூபாவை சராசரியாக உழைக்க வேண்டும்.

இலங்கையில் குடும்பமொன்றுக்கு தேவையான மாத வருமானத்தின் உண்மை நிலை | Cost Of Living In Sri Lanka For Families

குறித்த செலவுகளை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, மாதாந்திர சராசரி உணவுச் செலவு நிலையானதாக இருப்பதாகவும், மாதாந்திர சராசரி உணவு அல்லாத செலவு மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் குடும்பமொன்றுக்கு தேவையான மாத வருமானத்தின் உண்மை நிலை | Cost Of Living In Sri Lanka For Families

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உணவு அல்லாத மாதாந்த சராசரி செலவினம் 6 வீதத்தால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.