7 வேட்பாளர்கள் உட்பட 512 பேர் கைது..

7 வேட்பாளர்கள் உட்பட 512 பேர் கைது..

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கும் இன்றைய தினம் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 337 முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேநேரம், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 362 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை. இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த தேர்தல் காலப்பகுதியில் குற்றச் செயல்கள் தொடர்பில் 104 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

காவல்துறை தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் காவல்துறை பேச்சாளர், ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் விதி மீறல் தொடர்பில் 314 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

 

இதற்கமைய, மொத்தமாக 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

 

7 வேட்பாளர்கள் உட்பட 512 கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

 

இதேநேரம்,  3 அரச வானகங்கள் 3 உட்கட 153 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக

 

இதேவேளை, பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரகாலத்திற்கு பேரணிகள், கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

எனவே, இந்த சட்ட ஏற்பாடுகளுக்கு மதிப்பளித்து செயற்பட்டு தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது.