
பணத்திற்கான தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பிரதேசத்தில் நேற்று மாலை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பணத் தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் தம்பியைத் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏகலாவில் வசிக்கும் 35 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.
சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.