எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று(31) நள்ளிரவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் இந்த நாட்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால்  நாட்டில் எரிபொருள் விலை குறையக்கூடும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.

fuel price in sri lanka

மேலும், உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால்  எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த மாதமும் அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.