பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த லண்டன் வாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த லண்டன் வாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட லண்டன் வாழ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (30) கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடபில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த லண்டன் வாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Londoner Arrested For Bribing Police Kilinochchiலண்டனில் இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி இலஞ்சம் வழங்க முற்பட்படுள்ளார்

லண்டன் பிரஜை தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்கவிற்கு பொலிஸ் நிலைய அலுவலகத்திற்குள் வைத்து 50000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.

இதன்போதே குறித்த சந்தேகநபர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (30) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.