
ஆனையிறவு: பெயரைக் கேட்டதும் அதிரும் அநுர அரசு..!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்படும் ஆனையிறவு பிரதேசம் தற்போது தமிழர் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
ரஜலுணு விவகாரம் சூடுப்பிடித்துள்ள நிலையில் ஆனையிறவு உப்பளம் என்ற பதம் ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது என்ற வினா எழுந்துள்ளது.
இதேவேளை, ஆனையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை.
இந்தப் பெயரை கண்டவுடன் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒரு சில ஊடகவியலாளர்களும் ஒரு சில வலையொலி செய்பவர்களும் இதனை பெரிதுபடுத்துகின்றார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.