
விகாராதிபதியை கொன்றவருக்கு விளக்கமறியல்
அநுராதபுரம் எப்பாவல கிரலோகம விகாரையின் விகாராதிபதியை கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பல கோணங்களிலும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத் தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
கைதானவர் , குறித்த விகாரையில் விகாராதிபதியின் முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றிய 26 வயதுடைய இளைஞன் ஆவார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை தம்புத்தேகம நீதிமன்றத்தில் நேற்று(28) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.