இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சென்றவருக்கு நேர்ந்த துயரம்

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சென்றவருக்கு நேர்ந்த துயரம்

 திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்குகளை வியாழக்கிழமை (27) முடித்துக்கொண்டு இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கீழ் திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்றிருந்தபோது, ​​குறித்த இராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சென்றவருக்கு நேர்ந்த துயரம் | Soldier Death While Attending Funeral

சம்பவத்தில் கேகாலையில் வசிக்கும் இஷான் உதய குமார (38) என்ற சிப்பாயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இராணுவ வீரர் வவுனியாவில் உள்ள பன்பேமடுவ இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்தார்.

உயிரிழந்த இராணுவ வீரர் மேலும் மூன்று சிப்பாய்களுடன், அதே இராணுவ தளத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கீழ் திவுல்வேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றமதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.