நீதிமன்றத்திற்குள் நடந்த படுகொலை - வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு - பின்னணியில் யார்...!

நீதிமன்றத்திற்குள் நடந்த படுகொலை - வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு - பின்னணியில் யார்...!

பாதாள உலககுழுவை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு மற்றும் கொலை, வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொலையை, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் குற்ற கும்பலை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, பட்டுவத்தே சாமர மற்றும் ஜூட் பிரியந்த ஆகியோர் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது டுபாய் மற்றும் பிரான்ஸில் மறைந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவை பாதுகாக்க 12 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறப்பு படை அதிகாரிகள் கடமையில் இருந்துள்ளனர்.

தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடந்ததா என ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் பல தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதிமன்றத்திற்குள் நடந்த படுகொலை - வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு - பின்னணியில் யார்...! | Foreign Gang Planned Murder Of Ganemulla Sanjeewa

நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைத்து நபர்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் ஆனால் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டது.

இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு கொலையாளிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.