குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம்

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம்

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா, சமீபத்தில் பல குழந்தைகளும் முதியவர்களும் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். 

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம் | Risk Chikungunya Transmission In Children Elderly

காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, உடலில் கருமைதன்மை ஏற்படுதல், குறிப்பாக மூக்கைச் சுற்றி நிறமாற்றம் போன்றவை இந்த வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தபட்டுள்ளது.

மேலும், டெங்குவை பரப்பும் அதே வகை கொசுக்கள் சிக்கன்குனியாவையும் பரப்புவதால், கொசுக்கள் பெருகும் இடங்களை ஒழிப்பதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

வீடுகளிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீர் தேங்குவதை தடுத்தல், கொசு விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.