நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டம் வரை உயர்வு

நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டம் வரை உயர்வு

நாட்டில் பெரும்பாலான நகர்ப்புற பகுதிகளில் இன்றைய தினம் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் அளவில் குறித்த நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாக அதன் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டம் வரை உயர்வு | Air Quality In Urban Areas Rises Unhealthy Levels

தெற்காசியாவில் உள்ள பல நாடுகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலவும் வானிலையுடன் இலங்கையிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்றுள்ளது. இதுவே இதற்கு காரணமாகும்.

சில நகரங்களில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்துள்ளதுடன் சில கிராமப்புறங்களில் காற்றின் தரம் சீரான நிலையில் உள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.