நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்

நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்

கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள், வன விலங்குகளின் ஊடுருவல் உட்பட பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு தற்போது மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இனந்தெரியாத புழு இனத்தினால் பல பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கை சேதப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அநுராதபுரம் (Anuradhapura) மாவட்டத்தில் அநுராதபுரம், ஓயாமடுவ, விளாச்சிய போன்ற பிரதேசங்களில் இந்த புழுத் தொல்லையால் நெற்பயிர்ச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினாலும் புழுக்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல் | Paddy Farmers Face New Crisis As Unidentified Worm

மேலும் புழுக்களின் தொல்லையால் விளைச்சல் வேகமாக குறையும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த புழு தொல்லையை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மற்றைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் பயிர்கள் மற்றும் வாழ்வாதாரம் மேலும் அழிவடைவதைத் தடுப்பதற்கு உடனடித் தலையீட்டை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.